Monday, 3 October 2011
வேண்டும் நெற்றியிலே கண்ணொன்று
மனிதக் குப்பைகள் மலிந்த இப்பூமியிலே
நினைத்த மாதிரி வாழ்வெனக்கு அமையவில்லை
பட்டுக்குஞ்தத்திற்கு தவமிருக்கும் விளக்குமாறுகள்
இங்கிருக்கும் எல்லாமே எனக்கு நேர்மாறுகள்
அடுத்தவரின் சுயமரியாதை அவரவரின் சுதந்திரத்தை
கெடுப்பதற்கென்றே திரியுதிங்கே கூட்டங்களாய் - நம்பவைத்துக்
கழுத்தறுத்து நல்லவராய் நடித்து வஞ்சம் தீர்த்து
முதுகில் குத்தும் மூளையற்ற ஜென்மங்கள்
களவெடுக்குதுகள் பொய் பேசுதுகள் - அடுத்தவன்
வளமாய் வாழ்ந்தால் அதுகண்டு வயிரெரியுதுகள்
அமைதியாய் யாரும் இருந்தாலும் அவர்களின்
பிரச்சனையில் மூக்கைவிட்டு குழப்பத்தை உண்டாக்குதுகள்
தற்பெருமைத் தம்பட்டம் அடிக்கின்ற மூடர்கள்
பட்டபின்புகூட திருந்தாத வடிகட்டிய முட்டாள்கள்
வீணாகத் திரிகின்ற இதுபோன்ற வேதாளங்கள்
நீறாகிப் போகட்டும்
சிவனே
நான்திறந்தால்
நெற்றியிலே கண்ணொன்று தந்துவிடு – உன்படைப்பில்
தறிகெட்டுப் போனதுகள் அழிந்தொழியட்டும்
Labels:
கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
உங்கள் கருத்திற்கு நன்றி நண்பரே.
இரண்டு கண்கள் இருக்கும் போதே இப்படியெல்லாம் கண்றாவிகளைப் பார்க்கப் பொறுக்காது வெதும்பும் இம்மனம் இன்னும் ஒன்று கிடைத்துவிட்டால் என்னபாடு படும். வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும். வந்த துன்பம் எது என்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை. கவிதை அற்புதம்
Herzlich willkommen teacher!
எப்படி எனது புதிய முயற்சி?
Ich versuche alles was ich bis jetzt geschrieben habe, ins Netz zu bringen, damit diese nicht verloren gehe. Erwarte von Ihnen Ratschlaege um diese Blog zu verbessern. Bis dann.
Post a Comment