Wednesday 21 June 2017

ஆறுவது சிரமம்






நினைத்துப் பார்க்கின்றேன்
என்னோடு நீயிருந்த நாட்களை

ரீங்காரமிட்டு பறக்கின்றன
சில்வண்டுகள் எல்லாம்
என்னைச் சுற்றி

உறுண்டு வந்து உண்மைகள்
உறுத்துகின்றன மீண்டும்
உதிர்ந்து போகிறேன் பூக்களென
அடுத்த நொடியே

இப்படியெல்லாம் நடக்கும் என்று
இருந்திருந்தால்...
அன்று
அப்படியெல்லாம் எதுவும்
நடந்திருக்க வேண்டாமே

அப்போது அப்படியும்
இப்போது இப்படியும்
காலங்கள் மாறியதால்

கனந்து கொண்டிருக்கிறது
எனக்குள் இன்னும்
ஞாபகக் குப்பைகள்

எனக்காகப் பிறந்தவள் நீயென்று
எழுதிக்கூட தந்தாயே...
சாவேன் உனக்கேதும் என்றால்
என்று
சத்தியமும் செய்தாயே...

வழக்கா போட முடியும்
உன் மீது
வார்த்தை தவறிவிட்டாய் என

போனது தான் போனாய்
பொல்லாத உன் நினைவுகளை மட்டும்
ஏனடி விட்டுப் போனாய்

வற்றிப்போன குளத்தையும்
பட்டுப்போன மரத்தையும்
ஒப்பிட்டுப் பார்க்கிறேன்
என்னோடு

உயிர் விட்டுப்போகவில்லை இன்னும்
ஆனால்
நான் செத்துப்போனேன்.



2 comments:

Post a Comment