Saturday 26 October 2013

படிகள்




தடம் மாறும் வாழ்நிலைப் படிகள்
தடுமாறும் சில படிநிலைகள்
ஏறி இறங்கப் பற்பல படிகள்
எல்லாம் சொல்லும் உயிருள்ள கதைகள்

பார்வையில் உள்ளம் பறிகொடுத்து
பாழாப் போனது முதற்படி
கண்களை மட்டும் நம்பிக்கொண்டு
காதலில் வீழ்ந்தது ரெண்டாம் படி

முட்டாளைப் போலே பின்னாடி
மெனக்கட்டுத் திரிந்தது மூன்றாம் படி
நல்லவர் அறிவுரை கேளாமலே நானும்
சொன்னது காதலை நாலாம் படி

நிரந்தரம் அதுவென்று நம்பி
அருகிருந்த பொழுதுகள் ஐந்தாம் படி
வெந்து நீறாக வந்த பிரிவில்
நொந்து நூலானது ஆறாம் படி

ஏளனப் பார்வையில் எல்லாமே பொய்யாக
மடலேறிச் சாய்ந்தது ஏழாம் படி
படிப் படியாய் முன்னேறி தடுக்கி விழுந்த பின்னாடி
கிட்டிய ஞானம் எட்டாம் படி.




3 comments:

Anonymous said...

வணக்கம்

வாழ்க்கை படிநிலை பற்றிய கவிதை அருமை... கடசியில் ஞானம் வெளிவந்தது மிக மிக அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரசிக்கும் படியான அழகிய கவிதை...

வாழ்க்கையின் பாதை...

sathees said...

எல்லாமே கடந்து வந்த படிகள் தான்.
படித்ததோடு மட்டும் நின்றுவிடாமல்
வாழ்த்தவும் செய்த உங்களுக்கு எனது
மனமார்ந்த நன்றிகள்.

Post a Comment