Tuesday 29 October 2013

நிலாச்சருகு




எனக்கு வயது எண்பத்தாறு
நான் இருக்குமிடம் முதியோர் வீடு

அலை அடித்து சாய்ந்த மரமென
அந்த அலை அரித்து சென்ற மணலென
ஆகிவிட்டது என் வாழ்க்கை
முதிர்ந்து விட்டது என் யாக்கை

கனாக் கண்ட வாழ்வெங்கே – கால்
துள்ளித் திரிந்த காலமெங்கே

சுட்டிய விழிப்பார்வை எங்கே – என்
கட்டழகு தேகம் எங்கே

சரிந்த நடை அழகு எங்கே – நான்
சிரித்திருந்த பொழுதுகள் எங்கே

சுவாசித்த காற்றெங்கே – என்னை
நேசித்த காதலிகள் எங்கே

சுற்றித்திரிந்த வீதிகள் அழிந்தே தான் போயின
மூட்டுவலியும் முதுகுவலியும் மிச்சமாய் ஆகின

தோள் கொடுத்த தோழர்கள் காணாமல்; போனார்கள்
சொந்தங்களும் பந்தங்களும் சொல்லாமல் ஏகினர்

ஆடி அடங்கிப் போகும் தருணம்
மிச்சமிருக்கும் ஆசைகள் முளைத்து எழும்

என்ன செய்வது
வாழ்கை திரும்பப் போவதில்லை
இந்த வயதும் குறைய வழியில்லை
ஆற்றுவதற்கு இங்கு யாருமில்லை
இது நான் முடியும் வேளை.



6 comments:

Yaathoramani.blogspot.com said...

சருகின் உணர்வினை
உணரச் செய்து போகும் அருமையான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

காளியப்பன் கவிதைகள் said...

முதுமை ...என்றால்
முயற்சிகளில்
ஏறிவந்த இளமை!
பயிற்சிகளில்
ஊறிவந்த பழைமை !
தளர்ச்சிகளைத்
தள்ளி வந்த தண்மை!
அயர்ச்சிகளை
அகற்றி வந்த அகமை !
வளர்ச்சிகளைக்
கொடுத்து வந்த வண்மை!
கிளர்ச்சிகளைக்
கிள்ளிப் போட்ட கேண்மை!
இகழ்ச்சிகளை
எரித்துவந்த இனிமை!
புரட்சிகளைப்
புகுத்தி நிற்கும் பொருண்மை !
-0-
என்று ஒருமுறை எழுதியிருந்தேன்.. ஆரோக்கியமாக உடலையும், மனத்தையும் பேணுவதே வாழ்வில் முக்கியம். அது இல்லாதவரை அனைத்தும் சூரியனைக் கண்ட் பனியாய்ப் பறிபோய்விடும்.தங்களின் னிலாச் சருகு கூட வற்றிவிட்ட இந்த ஆரோக்கிய வறட்சியைக் காட்டும் தாகமே!. கர்த்தர் கைகொடுப்பாராக!-எசேக்கியல் காளியப்பன்.

sathees said...

வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பர்களே.
@ காளியப்பன்: உங்கள் கவிதை கூட மிகவும்
அழகாகவும் அர்த்தம் நிறைந்ததாகவும் இருக்கிறது.
நன்றி. வாழ்த்துக்கள்.

Anonymous said...

வணக்கம்
உணர்வு மிக்க கவிதை அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

நம்பள்கி said...

நல்ல கவிதை.
என் தமிழ்மணம் வோட்டு பிளஸ் +1 போட்டாச்சு!
நன்றி!

sathees said...

நன்றி நண்பர்களே.

Post a Comment